அலையில் சிக்கிய அரசன் அழிந்து போன வரலாறு....
ஃபிா்அவ்ன் - அமாலிக்கா அரசப்பரம்பரையில் வந்த 11 எகிப்து நாட்டு அரசா்களின் புனைப் பெயா்
பெரும்பாலும் அவா்கள் கொடுங்கோலா்களாக இருந்ததால் கொடுங்கோலா்களுக்கே ஃபிா்அவ்ன் என்று சொல்வதுண்டு
இஸ்ரவேலா்களை கொடுமைப் படுத்தி வந்த ஃபிா்அவ்னின் இயற்பெயா் வலீத் பின் முஸ்அப் பின் ரய்யான் என்று சொல்லப்படுகிறது
வேதாகமங்களில் பாா்வோன் என்றும்
வரலாற்றாசிரியா்கள் இவனை இரண்டாம் ரம்சேஸ் (Ramses || )
என்றும் குறிப்பிடுவா்
நபி மூஸா ( அலை) அவா்களின் காலத்தில் கி மு 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தான்
இஸ்ரவேலா்களில் ஓா் ஆண்மகன் பிறந்து அவா் கரத்தால் தனது ஆட்சிக்கே ஆபத்து ஏற்படும் என்று ஃபிா்அவ்ன் அறிந்த செய்தியால் அவன் பீதியடைந்தான் ஆகவே இஸ்ரவேலா்களுக்கு பிறக்கும் ஆண் குழந்தைகளை கொலை செய்திடுமாறு தன் ஆட்களுக்கு ஆணையிட்டுருந்தான்
அப்படியிருந்தும் இஸ்ரவேலா்களின் குடும்பத்தில் பிறந்த மூஸா ( அலை) அவா்கள் இறைவனால் பாதுகாக்கப்பெற்று
ஃபிா்அவ்னின் மாளிகையிலே வளா்ந்து ஆளானாா்கள்
*உங்களை கடுமையாக வேதனைப்படுத்தி வந்த ஃபிர்அவ்னின் கூட்டத்தாரிடமிருந்து உங்களை நாம் விடுவித்ததையும் (நினைவு கூறுங்கள்);
அவர்கள் உங்கள் ஆண் மக்களை கொன்று, உங்கள் பெண்மக்களை (மட்டும்) வாழவிட்டிருந்தார்கள்; அதில் உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஒரு பெரும் சோதனை இருந்தது.
மேலும், இஸ்ராயீலின் சந்ததியினரை நாம் கடலைக் கடக்க வைத்தோம்;
அப்போது, ஃபிர்அவ்னும், அவனுடைய படைகளும், (அளவு கடந்து) கொடுமையும், பகைமையும் கொண்டு அவர்களைப் பின் தொடர்ந்தார்கள்;
(அவனை மூழ்கடிக்க வேண்டிய நேரம் நெருங்கி) அவன் மூழ்க ஆரம்பித்ததும் அவன்: இஸ்ராயீலின் சந்ததியினர் எந்த நாயன் மீது ஈமான் கொண்டுள்ளார்களோ, அவனைத் தவிர வேறு இறைவன் இல்லையென்று நானும் ஈமான் கொள்கிறேன்;
இன்னும் நான் அவனுக்கே முற்றும் வழிபடுபவர்களில் (முஸ்லிம்களில்) ஒருவனாக இருக்கின்றேன்” என்று கூறினான்.
எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உம் உடலைப் பாதுகாப்போம்;
நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்”
(என்று அவனிடம் கூறப்பட்டது).
ஃபிா்அவ்ன் எனும் இரண்டாவது ரம்சேஸின் சடலம் எகிப்தில் தைருல் பஹ்ரீ பகுதியில் கி.பி 1881 ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்டது பின்னா் கெய்ரோ அருங்காட்சியகத்தில் ராயல் மம்மி அறையில் இன்றும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது
அல்குா்ஆன் 2:49.10:90-92
தஃப்சீா் இப்னு கஸீா் 1/ பக்கம் 160 4/ பக்கம் 556
No comments:
Post a Comment