தொழுகையின் பண்புகள்
(தொழுகையில் கட்டாயம் செய்ய வேண்டியவை காரியங்கள்)
1. உடல் சுத்தம்.2. இடம் சுத்தம்.
3. உடை சுத்தம்.
4. மானத்தை மறைத்தல்.
5. நிய்யத்துசெய்தல்.
6. நேரத்தை அறிதல்.
7. கிப்லாத் திசையை அறிதல்.
8. முதல் தக்பீர் தஹ்ரீமா.
9. கியாம் நிலை நிற்பது.
10. குர்ஆன் (கிராஅத்) ஓதுதல்.
11. குனிந்து ருகூவு செய்தல்.
12. ஸஜ்தா செய்தல்.
13. 'கஃதா' இருப்பு அமர்தல்.
1. உடல் சுத்தம்:
நஜாஸத்து, குஸ்லுக்குக் காரணமான ஜனாபத்து முதலியவைகளை விட்டும் சரீரம் சுத்தமாக இருக்க வேண்டும்.
2. இடம் சுத்தம்:
அசுத்தங்களை விட்டும் தொழுது கொள்ளும் இடம் பரிசுத்தமானதாக இருக்க வேண்டும்.
3. உடை சுத்தம்:
சகலவிதமான அசுத்தங்களை விட்டும் தொழுது கொள்ளும் இடம் பரிசுத்தமானதாக இருக்க வேண்டும்.
4. மானத்தை மறைத்தல்:
ஆணும், பெண்ணும் தன் சரீரத்தில் ஷரீஅத்தின் பிரகாரம் எவ்வளவு மறைக்க வேண்டுமென்று இருக்கிறதோ அவ்வளவு மறைக்க வேண்டும்.
5.நிய்யத்துசெய்தல்:
இன்ன நேரத்து தொழுகை இத்தனை ரக்அத்து என்று நிய்யத்து செய்ய வேண்டும்.
6. நேரத்தை அறிதல்: தொழுகையின் நேரங்களை அறிந்திருக்க வேண்டும்.
7. கிப்லாத் திசையை அறிதல்: கிப்லாவின் திசை இன்னதென்று திண்ணமாக அறிந்திருக்க வேண்டும்.
#தொழுகையின் #பர்ளுகள்.
உலக அளவில் எவ்வித மாற்றமின்றி அனைத்து முஸ்லிம் களாலும் ஒற்றுமையாக நிறைவேற்றப்படுகிறது.
நம்முடைய சண்டைகள் அனைத்தும் #சுன்னத்தான விடயங்களில் தான்.
#நபிவழி சுன்னத்தில் மட்டுமே உலகளவில் மாற்றங்களும் உள்ளது.
ஒன்றைத் தெரிந்து கொள்வோம். ஒருக்காலும் அனைத்து சுன்னத்களையும்....ஒருவரால் ஒரே நேரத்தில் கடைபிடிக்க முடியவே முடியாது.
எனவேதான் நான்கு (வழிச்சாலைகள்) #மத்ஹப்கள் உருவாக்கப்பட்டுள்ளது.*
தொழுகையின் வாஜிபுகள்:
- ஸூரத்துல் பாத்திஹா-அல்ஹம்து சூரா ஓதுதல்
- துனை சூரா அல்லது மூன்று ஆயத்துக்களை சேர்த்து ஓதுதல்.
- முதல் இரண்டு ரக்அத்துகளில் மட்டும் கிராஅத்தை சேர்த்து ஓதுதல்.
- ஒவ்வொரு 'ருக்னு'(செயல்களையும் நிதானமாகச் செய்தல்.
- முதலாவது இரண்டு ரக்அத்துக்குப் பின் (கஃதா) இருப்பு அமர்வது.
- இரண்டு கஃதா இருப்புகளிலும் அத்தஹிய்யாத் ஓதுதல்.
- முடிக்கும் போது அஸ்ஸலாமு அலைக்கும் என்று சொல்வது.
- வித்ரு (வாஜிபு) தொழுகையில் குனூத் ஓதுவது.
- இரண்டு ஈது தொழுகையில் அதிகமாக ஆறு தக்பீர்கள் சொல்வது.
- சப்தமிட்டு ஓத வேண்டிய சமயங்களில் சப்தமிட்டு ஓதுவது.
- மெதுவாக ஓத வேண்டிய சமயங்களில் மெல்ல ஓதுவது.
- முதலில் ருக்கூஃவும் பிறகு ஸஜ்தாவும் முறையே செய்வது.
- ஒவ்வொரு காரியங்களையும் தர்தீபாக –ஒழுங்காக செய்வது முன்பின் ஆகாமால் நிறைவேற்றுவது).
الحمدلله
ReplyDelete