அல்லாஹ்வே உன்னால் செய்ய முடியாதது என்று எதுவுமில்லை.
அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ்!
எல்லாம் வல்ல அல்லாஹ்வே உன்னால் செய்ய முடியாதது என்று எதுவுமில்லை.
சுட்டெரிக்கும் நெருப்பை இப்ராஹிம் நபி
அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்காக
குளிரவைத்தவனே!
ஆர்பரிக்கும் ஆழ் கடலை நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களைக்காப்பாற்ற
இரண்டாக பிளக்கவைத்தவனே
எலும்புகள் மிகவும் பலவீனமடைந்து
தலைமுடி நரைத்த நிலையில் மலடி யான
என் மனைவியின் மூலம் எனக்கு ஒரு வாரிசை தா "என மனமுருகி கேட்ட நபி
ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாத்திற்கு
குழந்தை செல்வத்தை வழங்கியவனே!
ஸவ்ர் குகையில் எங்கள் கண்மணி நபிகள் நாயகம்ﷺ அவர்களை காத்தவனே!
ஆட்சி அதிகாரங்களை அவர்களுக்கு வழங்கி இப்பூமியில் ஒரு முன்மாதிரி சமுதாயத்தை உருவாக்கியவனே!
உன்னால் முடியாதது என்று எதுவுமே இல்லை.
உலகெங்கும் வாழும் முஸ்லிம்களின் துன்பங்களை நீக்குவாயாக!
அநீதி இழைக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் அவர்களுக்கான உரிமைகள் கிடைக்க நல்லுதவி செய்வாயாக!
பொருளாதார சிக்கலினால் தங்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற இயலாமல் தவிப்போருக்கு உதவி செய்வாயாக!
எங்களின் பாவங்களை மன்னித்து எங்களுக்கு மத்தியில் நல்லுறவு நிகழச்செய்வாயாக!
என்றேன்றும் உனக்குக் கட்டுபட்டு வாழும் நல்லடியர்களாக எங்களை வாழ வைப்பாயாக!
رَبَّنَا تَقَبَّلْ مِنَّا ؕ اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْمُ ، وَتُبْ عَلَيْنَا ۚ اِنَّكَ اَنْتَ التَّوَّابُ الرَّحِيْمُ
“எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து இந்த துஆவை ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்”. எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.” 2:127-128
ஆமீன்
No comments:
Post a Comment