Popular Posts

Sunday, September 15, 2019


உளுவின் பர்ளுகள்:

உளுவின் போது கட்டாயம் செய்ய வேண்டிய காரியங்கள்.

  1. முகம் கழுவுதல்:
  2. கைகளை கழுவுதல்:
  3. மஸ்ஹு செய்தல்:
  4. கால்களை கழுவுதல்:
நீங்கள் தொழுகைக்குச் சென்றால் உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் கைகளையும், கணுக்கால் வரை உங்கள் கால்களையும் கழுவுவதோடு, நீரில் நனைத்த கைகளினால் உங்கள் தலையையும்(சிறு பகுதியைத்) தடவிக் கொள்ளுங்கள்'. -(அல்-குர்ஆன் (5:6)



1. முகம் கழுவுதல்:
நெற்றி ரோமத்திலிருந்து முகவாய்க்கட்டை வரை நீளத்திலும் ஒரு காது முதல் மறுகாது வரை அகலத்திலும் முகத்தை நன்கு கழுவுதல்.

2. கை கழுவுதல்:
இரண்டு கரங்களின் முட்டுக் கை உள்ப டநன்றாய் நீர் சொட்ட ஊற்றிக் கழுவுதல்.

3. மஸ்ஹு செய்தல்:
தலையில் நாலிலொரு பாகத்தில் தண்ணீர் நன்கு படும்படி ஈரக் கை கொண்டு துடைத்தல்.

4. கால் கழுவுதல்:
இரண்டு கால்களை கரண்டைக் உட்பட நன்றாக தேய்த்துக் கழுவுதல்.



ஷாபி மட்டும்.
5. உளுவின் கடமையை நிறைவேற்றுகிறேன் என்று நிய்யத் செய்தல்.
6. இவைகளை வரிசைக்கிரமமாக செய்தல்


உளுவின் சுன்னத்கள்


1.கிப்லாவை முன்னோக்கி உட்காருதல்.

2. ஒளு செய்கிறேன் என்று நிய்யத் செய்தல்.

3.பிஸ்மில்லாஹ் சொல்லி ஆரம்பித்தல்

4. இரு கரங்களையும் மணிக்கட்டு வரை மூன்று முறை கழுவுதல்


.5.பற்களைத் தேய்த்தல்(மிஸ்வாக் செய்தல்)

6. மூன்று முறை நீரால் வாய்க் கொப்பளித்தல்.

7. வாய்க் கொப்பளிக்க தண்ணீரை வாய்க்கு செலுத்தும்போதே நாசிக்கும் செலுத்தி, சிந்தியும் கொப்பளித்தும் சுத்தம் செய்தல்.

8. முகத்தை மூன்று முறை தேய்த்துக் கழுவுதல் (தாடியுடையவர் தாடி, ரோமங்களைக் கோதிக் கழுவ வேண்டும்.)

9. வலது கையை முதலிலும் இடது கையை பிறகுமாக மும்மூன்று முறை முட்டுக்கை உள்பட தேய்த்துக் கழுவுதல்.

10. சிரசில் மூன்று முறை 'மஸ்ஹு' செய்தல். அதாவது இரு கரங்களையும் நீரில் நனைத்து நெற்றியிலிருந்து பிடரி வரை இழுத்து மீண்டும் நெற்றிவரை இழுத்து துடைத்தல்.

11.மீண்டும் தண்ணீரில் கைகனை நனைத்து, சுண்டு விரல் கொண்டு காதின் முன் பாகத்தையும் பெருவிரல் கொண்டு காதின் பின் பாகத்தையும் மூன்றுமுறை துடைத்தல்.

12. கரண்டை உட்பட வலது காலை முன்னும் இடது காலை பின்னுமாக கழுவுதல்.

13. மேற்கூறியபடி உறுப்புகளை நன்றாகத் தேய்த்துக் கழுவுதல்.

14. ஓர் உறுப்பு கழுவிக் காய்வதற்கு முன் மறு ஊறப்பைத் தொடர்ச்சியாக கழுவுதல். இந்த முறைப்படி முன் பின்னாகாமல் ஒழுங்காகச் செய்து கழுவுவதே சுன்னத்தான முறைப்படி செய்யும் ஒழுவாகும்.

Thursday, September 12, 2019

தொழுகையின் சுன்னத்துக்கள்


தொழுகையின் சுன்னத்துக்கள்:





1. தக்பீர் தஹ்ரீமாவின் போது இரு கரங்களையும் இரு காதுகள் வரை உயர்த்துவது.

2. பிறகு 'ரப்உல்யதைன்'(இரு கரங்களை உயர்த்துவுது) உடன் முதல் தக்பீர் அல்லாஹு அக்பர்' என்று சொல்வது

3. பிறகு 'வல்உல்யதைன்' அதாவது இரண்டு கைகளையும் ரக்கஅத்து கட்டும் போது வயிற்றில் நாபி (தொப்புள்) மீது அல்லது நெஞ்சுப்பகுதியில் வைப்பது.

4. அதன் பிறகு 'ஸுப்ஹானக்க அல்லாஹும்ம…' என்ற ஸனாவை அல்ல வஜ்ஜஹத்து ஓதுவது.

5. பிறகு 'அவூது பில்லாஹி….' என்னும் தஅவ்வுத் ஓதுவது.

6. பிறகு 'பிஸ்மில்லாஹி…' ஓதுவது.

7. ருக்கூவிலும், ஸஜ்தாக்களிலும் அதனதன் தஸ்பீஹ்களை ஓதுவது.

8. ஒரு நிலையிலிருந்து இன்னொன்றுக்குப் நிலைக்குப் போகையில் 'அல்லாஹு அக்பர்' என்று தக்பீர் சொல்லி போவது.

9. ருகூவிலிருந்து எழுந்து 'ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா' சொல்வது.

10. ருகூவுக்குப் பிறகு 'கவ்மா(நிலை) என்னும் நிறு நிலையிலும் இரு ஸஜ்தாக்களுக்குpடையில் 'ஜல்ஸா' (இருப்பு)விலும் சிறிது நேரமாவது தாமதிப்பது.

11. கஃதா இருப்பில் 'தரூது இப்றாஹீம்' ஓதுவது. அதனுடன் 'துஆ மாஸூரா 'ஓதுவது.

12. அல்ஹம்து முடிவில் ஆமீன் என்று மெதுவாக அல்லது சப்தமாக சொல்வது.

தொழுகையின் பண்புகள்

தொழுகையின் பண்புகள்


(தொழுகையில் கட்டாயம் செய்ய வேண்டியவை காரியங்கள்)



தொழுகையின் பர்ளுகள்.

1. உடல் சுத்தம்.
2. இடம் சுத்தம்.
3. உடை சுத்தம்.
4. மானத்தை மறைத்தல்.
5. நிய்யத்துசெய்தல்.
6. நேரத்தை அறிதல்.
7. கிப்லாத் திசையை அறிதல்.
8. முதல் தக்பீர் தஹ்ரீமா.
9. கியாம் நிலை நிற்பது.
10. குர்ஆன் (கிராஅத்) ஓதுதல்.
11. குனிந்து ருகூவு செய்தல்.
12. ஸஜ்தா செய்தல்.
13. 'கஃதா' இருப்பு அமர்தல்.



1. உடல் சுத்தம்: 
நஜாஸத்து, குஸ்லுக்குக் காரணமான ஜனாபத்து முதலியவைகளை விட்டும் சரீரம் சுத்தமாக இருக்க வேண்டும்.

2. இடம் சுத்தம்: 
அசுத்தங்களை விட்டும் தொழுது கொள்ளும் இடம் பரிசுத்தமானதாக இருக்க வேண்டும்.

3. உடை சுத்தம்: 
சகலவிதமான அசுத்தங்களை விட்டும் தொழுது கொள்ளும் இடம் பரிசுத்தமானதாக இருக்க வேண்டும்.

4. மானத்தை மறைத்தல்: 
ஆணும், பெண்ணும் தன் சரீரத்தில் ஷரீஅத்தின் பிரகாரம் எவ்வளவு மறைக்க வேண்டுமென்று இருக்கிறதோ அவ்வளவு மறைக்க வேண்டும்.

5.நிய்யத்துசெய்தல்: 
 இன்ன நேரத்து தொழுகை இத்தனை ரக்அத்து என்று நிய்யத்து செய்ய வேண்டும்.

6. நேரத்தை அறிதல்: தொழுகையின் நேரங்களை அறிந்திருக்க வேண்டும்.

7. கிப்லாத் திசையை அறிதல்: கிப்லாவின் திசை இன்னதென்று திண்ணமாக அறிந்திருக்க வேண்டும்.




#தொழுகையின் #பர்ளுகள்.
உலக அளவில் எவ்வித மாற்றமின்றி அனைத்து முஸ்லிம் களாலும் ஒற்றுமையாக நிறைவேற்றப்படுகிறது.
நம்முடைய சண்டைகள் அனைத்தும் #சுன்னத்தான விடயங்களில் தான்.
#நபிவழி சுன்னத்தில் மட்டுமே உலகளவில் மாற்றங்களும் உள்ளது.
ஒன்றைத் தெரிந்து கொள்வோம். ஒருக்காலும் அனைத்து சுன்னத்களையும்....ஒருவரால் ஒரே நேரத்தில் கடைபிடிக்க முடியவே முடியாது. 

எனவேதான் நான்கு (வழிச்சாலைகள்) #மத்ஹப்கள் உருவாக்கப்பட்டுள்ளது.*

தொழுகையின் வாஜிபுகள்:


  1. ஸூரத்துல் பாத்திஹா-அல்ஹம்து சூரா ஓதுதல்
  2. துனை சூரா அல்லது மூன்று ஆயத்துக்களை சேர்த்து ஓதுதல்.
  3. முதல் இரண்டு ரக்அத்துகளில் மட்டும் கிராஅத்தை சேர்த்து ஓதுதல்.
  4. ஒவ்வொரு 'ருக்னு'(செயல்களையும் நிதானமாகச் செய்தல்.
  5. முதலாவது இரண்டு ரக்அத்துக்குப் பின் (கஃதா) இருப்பு அமர்வது.
  6. இரண்டு கஃதா இருப்புகளிலும் அத்தஹிய்யாத் ஓதுதல்.
  7. முடிக்கும் போது அஸ்ஸலாமு அலைக்கும் என்று சொல்வது.
  8. வித்ரு (வாஜிபு) தொழுகையில் குனூத் ஓதுவது.
  9. இரண்டு ஈது தொழுகையில் அதிகமாக ஆறு தக்பீர்கள் சொல்வது.
  10. சப்தமிட்டு ஓத வேண்டிய சமயங்களில் சப்தமிட்டு ஓதுவது.
  11. மெதுவாக ஓத வேண்டிய சமயங்களில் மெல்ல ஓதுவது.
  12. முதலில் ருக்கூஃவும் பிறகு ஸஜ்தாவும் முறையே செய்வது.
  13. ஒவ்வொரு காரியங்களையும் தர்தீபாக –ஒழுங்காக செய்வது முன்பின் ஆகாமால் நிறைவேற்றுவது).

Monday, September 9, 2019

து.ஆ



اللـهـــم
إني أعوذ بك من هم يحزنني ومن فكر يقلقني
اللـهــم
إني أعوذ بك من ضيق الصدر
ومن شتات الأمر ومن العسر بعد اليسر

 யா அல்லாஹ்!



என்னை கவலைக்குள்ளாக்கும் துக்கத்திலிருந்து உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன்

மன அழுத்தத்திலிருந்து உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன்.

என் காரியங்கள்சிதறுண்டு போவதிலிருந்தும்

இலகுக்குப் பின் சிரமம் ஏற்படுவதிலிருந்து ம் பாதுகாப்பு தேடுகிறேன்.

யா அல்லாஹ்!எனது இம்மை,மறுமை,எனது குடும்பம்,எனது செல்வம் ஆகியவற்றில் ஆரோக்கியத்தையும்,மன்னிப்பையும் கேட்கிறேன்

யா அல்லாஹ்!எனதுகுற்றம்,குறைகளை மூடி மறைப்பாயாக!

எனது அச்சத்தை அச்சமின்மையைக் கொண்டு மாற்றுவாயாக!

எனது ரப்பே! எனக்கு முன்புறமிருந்தும்,என் பின் புறமிருந்தும்.எனது வலப்பக்கமிருந்தும், இடப்பக்கமிருந்தும், மேலிருந்தும், என்னைக் காப்பாற்றுவாயாக!

திடீரென எனக்கு கீழிலிருந்து பூமியிலிருந்து ஏற்படும் ஆபத்துகளிலில் நான் பிடிக்கப்படுவதை விட்டும் உன் கண்ணியத்தை முன்னுருத்தி உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்




ஆமீன்

ஆஷூரா நோன்பின் சிறப்புகள்


ஆஷூரா நோன்பின் சிறப்புகள்

ஆஷூரா என்ற அரபிச் சொல்லுக்கு தமிழில் பத்தாவது என்று பொருளாகும். முஹர்ரம் மாதம் பத்தாவது நாள் இந்நோன்பு வைக்கப்படுவதால் இதற்கு ஆஷூரா நோன்பு அதாவது பத்தாவது நாள் நோன்பு என்று பெயர் வைக்கப்பட்டது.
நபி (ஸல்) அவர்கள் ஆஷூரா நோன்பு நோற்பதை நமக்கு சுன்னத்தாக ஆக்கியிருக்கிறார்கள்.
ரமலான் நோன்பு கடமையாக்கப் படுவதற்கு முன்னால் மக்கள் ஆஷூரா (முஹர்ரம் பத்தாம் நாளில்) நோன்பு நோற்று வந்தார்கள். அது தான் கஅபாவுக்குப் புதிய திரை போடப்படும் நாளாக இருந்தது. அல்லாஹ் ரமலானுடைய நோன்பைக் கடமையாக்கிய போது, யார் ஆஷூராவுடைய நோன்பு நோற்க விரும்புகிறார்களோ அவர் அதை நோற்றுக் கொள்ளட்டும். யார் அதை விட்டு விட விரும்புகிறாரோ, அவர் அதை விட்டு விடட்டும். என்று அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 1592
இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அறியாமைக் கால (குறைஷி) மக்கள் ஆஷூராவுடைய நாளன்று நோன்பு நோற்கக் கூடியவர்களாக இருந்தார்கள். ரமலான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்னால் நபி (ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் அந்நோன்பை நோற்றார்கள். ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்ட போது நபி (ஸல்) அவர்கள், நிச்சயமாக ஆஷூரா நாள் அல்லாஹ்வுடைய நாட்களில் உள்ள நாளாகும். எனவே விரும்பியவர் அந்நாளில் நோன்பு நோற்கலாம். விரும்பியவர் விட்டு விடலாம் எனக் கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் 1901
மேற்கண்ட ஹதீஸ்கள் ஆஷூரா நோன்பு நோற்பது சிறப்பிற்குரியதும் சுன்னத்தானதும் ஆகும் என்பதைத் தெளிவுபடுத்துகின்றன.
ஆஷூரா நோன்பு ஏன்?
நபி (ஸல்) அவர்கள் யூத, கிறிஸ்தவர்கள் திருவிழாக்களின் மூலம் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நாட்களையும் அவர்கள் திருவிழாவாக கொண்டாட வேண்டும் என்று கருதிய நாட்களையும் அது நமக்கும் சிறப்பிற்குரியதாக இருந்தால் அந்த நாளில் நோன்பு நோற்பதைத் தான் நமக்கு வழிகாட்டிச் சென்றிருக்கிறார்கள்.
யூதர்களில் ஒருவர் உமர் (ரலி) யிடம், “அமீருல் மூமினீன் அவர்களே! நீங்கள் உங்கள் வேதத்தில் ஓதிக் கொண்டிருக்கும் ஒரு வசனம் யூதர்களாகிய எங்கள் மீது இறங்கியிருந்தால் அந்நாளை நாங்கள் ஒரு பெருநாளாக்கிக் கொண்டாடியிருப்போம்” என்றார். அதற்கு உமர் (ரலி) அவர்கள், “அது எந்த வசனம்?” எனக் கேட்டார்கள். அதற்கவர் கூறினார்: “இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன் (5:3) என்ற திரு வசனம் தான் அது)” அதற்கு உமர் (ரலி) அவர்கள், “அவ்வசனம் எந்த நாளில், எந்த இடத்தில் நபி(ஸல்) அவர்கள் மீது இறங்கியது என்பதை நாங்கள் அறிவோம். அரஃபாப் பெரு வெளியில் ஒரு வெள்ளிக்கிழமை தினத்தில் நின்று கொண்டிருக்கும் போது தான் (அவ்வசனம் இறங்கியது)” என்றார்கள்.
அறிவிப்பவர்: தாரிக் பின் ஷிஹாப் (ரலி) நூல்: புகாரி (45)
யூதர்கள் பெருநாளாக கொண்டாடியிருப்போம் என்று கருதிய அரஃபா நாளன்று நபி (ஸல்) அவர்கள் நமக்கு நோன்பு நோற்பதை வழிகாட்டியிருக்கிறார்கள்.
அது போன்று யூதர்கள், ஆஷூரா நாளையும் திருவிழாவாகக் கொண்டாடினார்கள். ஆஷூரா நாளை யூதர்கள் ஒரு பெருநாளாகக் கொண்டாடி வந்தனர். நபி (ஸல்) அவர்கள், “அந்நாளில் நீங்களும் நோன்பு வையுங்கள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி) நூல்: புகாரி 2005, 2006
கைபர் வாசிகளான (யூதர்கள்) ஆஷூரா நாளில் நோன்பு நோற்பவர்களாக இருந்தனர். இன்னும் அதனைப் பெருநாளாகவும் கொண்டாடினார்கள். அந்நாளில் அவர்களுடைய பெண்களுக்குத் தங்களுடைய நகைகளையும் தங்களுக்குரிய அழகூட்டும் ஆபரணங்களையும் அணிவிப்பார்கள். நபி (ஸல்) அவர்கள், நீங்கள் நோன்பு வையுங்கள் என (எங்களுக்குக்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி) நூல்: முஸ்லிம் 1913
நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது யூதர்கள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்பதைக் கண்டார்கள். “இது என்ன நாள்?” என்று கேட்டார்கள். “இது மாபெரும் நாள்! மூஸா (அலை) அவர்களை இந்த நாளில் தான் அல்லாஹ் காப்பாற்றினான். ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை (கடலில்) மூழ்கடித்தான். ஆகவே, மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் விதத்தில் இந்நோன்பை நோற்றார்கள்” என்று யூதர்கள் கூறினர். நபி (ஸல்) அவர்கள், நான் அவர்களை விட மூஸாவுக்கு நெருக்கமானவன் என்று கூறிவிட்டு அந்த நாளில் தாமும் நோன்பு நோற்று, தம் தோழர்களுக்கும் நோன்பு நோற்கும்படி கட்டளை இட்டார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி 3397
நான் தான் மிக உயர்ந்த கடவுள் என்று கூறிய சர்வாதிகார அரசன் கொடியவன் ஃபிர்அவ்ன் மற்றும் அவனுடைய கூட்டத்தினர் அழிக்கப்பட்ட மகிழ்ச்சியான நாள் தான் ஆஷூரா ஆகும். இதற்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு தான் ஆஷூரா நோன்பு நோற்கப்படுகிறது.
ஆனால் இன்றைக்குப் பெரும்பாலான இஸ்லாமிய மக்கள் இதைக் கூட அறியாமல் துக்க நாளாக அனுஷ்டித்து இறைவனுக்கு நோற்க வேண்டிய நோன்பை ஹசனார் ஹுசைனார் நோன்பு என்ற பெயரில் அவர்களுக்காக நோற்கின்றனர். அல்லாஹ் அல்லாதவர்களுக்காக நோற்கப்படும் நோன்பு நிச்சயமாக இணைவைப்புக் காரியம் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
எனவே, இது போன்ற தவறான செயல்களை விட்டும் நாம் விலகிக் கொள்ளவேண்டும்.
ஆஷூரா நோன்பின் சிறப்புகள்
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஆஷூரா எனும் இந்த நாளையும் (ரமலான்) என்னும் இந்த மாதத்தையும் தவிர வேறெதையும் ஏனையவற்றை விடச் சிறப்பித்து தேர்ந்தெடுத்து நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை.
நூல்: புகாரி 2006
நாம் ஒவ்வொரு நாளும் எண்ணற்ற பாவங்களைச் செய்கிறோம். அதனை அன்றே நாம் மறந்தும் விடுகின்றோம். நாம் பெரிதாகச் செய்த பாவங்களுக்காக மட்டும் தான் பாவமன்னிப்புத் தேடுகின்றோம்.
இதனால் சிறு பாவங்கள் அப்படியே கூடிக் கொண்டே வருகின்றன. இது போன்ற சிறு பாவங்களை நாம் செய்கின்ற நல்லறங்களின் மூலமும் அல்லாஹ் மன்னிக்கின்றான். இப்படிப்பட்ட நல்லறங்களில் ஒன்று தான் ஆஷூரா நோன்பாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்பதை அதற்கு முந்தைய ஓராண்டின் பாவத்திற்குப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என நான் எதிர்பார்க்கிறேன்.
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி) நூல்: முஸ்லிம் 1976
நபி (ஸல்) அவர்களிடம் ஆஷூரா நோன்பு பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு, அது கடந்த ஆண்டின் பாவத்திற்குப் பரிகாரமாகும் என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி) நூல்: முஸ்லிம் 1977
அல்லாஹ் அளவற்ற அருளாளன் என்பதற்கு மேற்கண்ட செய்தியும் ஒரு சான்றாகும்.
யூதர்களுக்கு மாறு செய்வோம்
ஆஷூரா நோன்பு என்பது பத்தாவது நாள் நோற்கின்ற நோன்பாக இருந்தாலும் யூதர்களும் அந்நாளில் நோன்பு நோற்றதால் நபி (ஸல்) அவர்கள் யூதர்களுக்கு மாற்றம் செய்யும் வகையில் ஒன்பதாவது நாளும் நோன்பு வைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்கள்.
அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளில் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு மக்களுக்கும் கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், (அது) யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே என்று வினவினர். அதற்கு நபியவர்கள், இன்ஷா அல்லாஹ், (அல்லாஹ் நாடினால்) அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளிலும் நோன்பு நோற்போம் என்று கூறினார்கள். ஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள்.
மற்றொரு அறிவிப்பில், அடுத்த ஆண்டு வரை நான் உயிரோடு இருந்தால், ஒன்பதாவது நாளிலும் நோன்பு நோற்பேன் என்று கூறியதாக வந்துள்ளது.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: முஸ்லிம் 1916, 1917
நபி (ஸல்) அவர்கள், ஒன்பதாவது நாள் நோன்பு நோற்காவிட்டாலும் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்குமாறு கூறியிருப்பதால், நாம் ஒன்பது, பத்து ஆகிய இரண்டு நாட்களும் நோன்பு நோற்க வேண்டும்.
10வது நாளும் 11வது நாளும் நோன்பு நோற்கலாமா?
சிலர் 9,10 அல்லது 10,11 வது நாள் நோன்பு நோற்கலாம் எனக் கூறுகின்றனர். அதற்கு பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆஷூரா நோன்பு வையுங்கள். அதில் யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் மாற்றம் செய்யுங்கள். அதற்கு முந்திய நாளோ அல்லது அதற்கு பிந்திய நாளோ நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: அஹ்மத் 2047, பைஹகீ
இது தொடர்பான அனைத்து அறிவிப்புகளிலும் இப்னு அபீ லைலா என்பவர் இடம் பெறுகிறார். இவர் மனன சக்தியில் மிக மோசமானவர் ஆவார். மேலும் இவரை அறிஞர்கள் பலவீனமானவர் என்றும் கூறியுள்ளனர். எனவே, இந்த ஹதீஸ் பலவீனமானதாகும்.
முஹர்ரம் 9,10 வது நாள் நோன்பு நோற்க வேண்டும் என்று வரக் கூடிய செய்திகள் தான் ஆதாரப் பூர்வமானவை ஆகும். எனவே, 10,11வது நாள் நோன்பு நோற்பது கூடாது.
குழந்தைகளுக்குப் பயிற்சி அளித்தல்

  1. நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் ஸஹாபாக்கள் இது போன்ற சுன்னத்தான நோன்புகளில் குழந்தைகளுக்கும் நோன்பு நோற்க பயிற்சி அளித்துள்ளனர்.
ருபய்யிவு பின்த் முஅவ்வித் பின் அஃப்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா (முஹர்ரம் 10வது) நாளன்று காலையில் மதினா புறநகரிலுள்ள அன்சாரிகளின் கிராமங்களுக்கு ஆளனுப்பி (இன்று) காலையில் நோன்பாளியாக இருப்பவர் தமது நோன்பைத் தொடரட்டும். நோன்பு நோற்காமல் காலைப் பொழுதை அடைந்தவர் இன்றைய தினத்தின் எஞ்சிய பொழுதை (நோன்பிருந்து) நிறைவு செய்யட்டும் என்று அறிவிக்கச் செய்தார்கள்.
நாங்கள் அதன் பின்னர், அந்நாளில் நோன்பு நோற்கலானோம். எங்கள் சிறுவர்களையும் அல்லாஹ் நாடினால் நோன்பு நோற்கச் செய்வோம். நாங்கள் பள்ளிவாசலுக்குச் செல்லும் போது கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காகச் செய்து அவர்களில் ஒருவன் (பசியால்) உணவு கேட்டு அழும் போது, நோன்பு திறக்கும் வரை (அவன் பசியை மறந்திருப்பதற்காக) அவனிடம் அந்த விளையாட்டுப் பொருட்களைக் கொடுப்போம்.
நூல்: முஸ்லிம் 1919
சிறப்பு மிக்க இந்த ஆஷூரா நோன்பை நோற்று இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ்வின் அருளைப் பெறுவோமாக!

♣ ஆஷூறா தினத்தில் ஓத வேண்டிய விசேஷட துஆ


♣ ஆஷூறா தினத்தில் ஓத வேண்டிய விசேஷட துஆ
اَللهم يَاقَابِلَ تَوْبَةِ آدَمَ يَوْمَ عَاشُوْرَاءَ
وَيَا رَافِعَ إِدْرِيْسَ إِلَى السَّمَاءِ يَوْمَ عَاشُوْرَاءَ
وَيَا مُسَكِّنَ سَفِيْنَةِ نُوْحٍ عَلَى الْجُوْدِيِّ يَوْم عَاشُوْرَاءَ َ
وَيَا مُنَجِّيَ إِبْرَاهِيْمَ مِنْ نَارِ نُمْرُوْدَ يَوْمَ عَاشُوْرَاءَ
وَيَاجَامِعَ شَمْلِ يَعْقُوْبَ يَوْمَ عَاشُوْرَاءَ
وَيَاكَاشِفَ ضُرِّ أَيُّوْبَ يَوْمَ عَاشُوْرَاءَ
وَيَافَارِجَ كُرْبَةِ ذِي النُّوْنِ يُوْنُسَ يَوْمَ عَاشُوْرَاءَ
وَيَاغَافِرَ ذَنْبِ دَاؤُوْدَ يَوْمَ عَاشُوْرَاءَ
وَيَاسَامِعَ دَعْوَةِ مُوْسَى وَهَارُوْنَ يَوْمَ عَاشُوْرَاءَ
وَيَازَائِدَ الْخَضِرِ فِى عِلْمِهِ يَوْمَ عَاشُوْرَاءَ
وَيَارَافِعَ عِيْسَى بْنِ مَرْيَمَ إِلَى السَّمَاءِ يَوْمَ عَاشُوْرَاءَ
وَيَانَاصِرَ مُحَمَّدٍ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ عَاشُوْرَاءَ
وَيَاخَالِقَ الْجَنَّةِ وَالنَّارِ يَوْمَ عَاشُوْرَاءَ
وَيَا مُنَزِّلَ التَّوْرَاةِ وَالزَّبُوْرِ وَالْإِنْجِيْلِ وَالْفُرْقَانِ الْعَظِيْمِ يَوْمَ
عَاشُوْرَاءَ
وَيَاخَالِقَ جِبْرِيْلَ وَمِيْكَائِيْلَ وَإِسْرَافِيْلَ وَعِزْرَائِيْلَ يَوْمَ عَاشُوْرَاءَ
وَيَاخَالِقَ الْعَرْشِ وَالْكُرْسِيِّ وَالَّلوْحِ وَالْقَلَمِ يَوْمَ عَاشُوْرَاءَ
وَيَاخَالِقَ الشَّمْسِ وَالْقَمَرِ وَالنُّجُوْمِ يَوْمَ عَاشُوْرَاءَ
وَيَاخَالِقَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ يَوْمَ عَاشُوْرَاء


اَللهم إِقْضِ لَنَا الْحَاجَاتِ يَاقَاضِيَ الْحَاجَاتِ، وَادْفَعْ عَنَّا السَّيِّئآتِ وَالْبَلِيَّاتِ، يَادَافِعَ الْسَيِّئآتِ وَالْبَلِيَّاتِ، وَسَلِّمْنَا مِنْ آفَاتِ الدُّنْيَا وَفِتَنِهَا وَبَلَائِهَا وَوَبَائِهَا وَمُصِيْبَاتِهَا وَاَسْقَامِهَا وَآلَامِهَا وَشِدَّاتِهَا وَفَقْرِهَا وَمِنْ آفَاتِ الْآخِرَةِ وَعَذَابِهَا وَأَهْوَالِهَا بِحُرْمَةِ سَيِّدِ الثَّقَلَيْنِ وَرُسُوْلِ الْكَوْنَيْنِ مُحَمَّدٍ الْمُصْطَفَى خَاتَمِ النَّبِيِّيْنَ يَاحَيُّ يَاقَيُّوْمُ يَاذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ يَامَالِكَ يَوْمِ الدِّيْنِ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِيْنُ وَبِحُرْمَةِ سَيِّدَيْنِ الشَّهِيْدَيْنِ أَبِيْ مُحَمَّدٍ الْحَسَنِ وَأَبِيْ عَبْدِ اللهِ الْحُسَيْنِ، اَللهم زِدْهُمَا تَعْظِيْمًا وَتَكْرِيْمًا، وَ;>  وَ  

அலையில் சிக்கிய அரசன் அழிந்து போன வரலாறு


அலையில் சிக்கிய அரசன் அழிந்து போன வரலாறு....




ஃபிா்அவ்ன் - அமாலிக்கா அரசப்பரம்பரையில் வந்த 11 எகிப்து நாட்டு அரசா்களின் புனைப் பெயா்
பெரும்பாலும் அவா்கள் கொடுங்கோலா்களாக இருந்ததால் கொடுங்கோலா்களுக்கே ஃபிா்அவ்ன் என்று சொல்வதுண்டு

இஸ்ரவேலா்களை கொடுமைப் படுத்தி வந்த ஃபிா்அவ்னின் இயற்பெயா் வலீத் பின் முஸ்அப் பின் ரய்யான் என்று சொல்லப்படுகிறது
வேதாகமங்களில்  பாா்வோன் என்றும்
வரலாற்றாசிரியா்கள் இவனை  இரண்டாம் ரம்சேஸ் (Ramses || )
என்றும் குறிப்பிடுவா்

நபி மூஸா ( அலை) அவா்களின் காலத்தில் கி மு 15 ஆம்  நூற்றாண்டில் வாழ்ந்தான்

இஸ்ரவேலா்களில் ஓா் ஆண்மகன் பிறந்து அவா் கரத்தால் தனது ஆட்சிக்கே ஆபத்து ஏற்படும் என்று ஃபிா்அவ்ன் அறிந்த செய்தியால் அவன் பீதியடைந்தான் ஆகவே இஸ்ரவேலா்களுக்கு பிறக்கும் ஆண் குழந்தைகளை கொலை செய்திடுமாறு தன் ஆட்களுக்கு ஆணையிட்டுருந்தான்

அப்படியிருந்தும் இஸ்ரவேலா்களின் குடும்பத்தில் பிறந்த மூஸா ( அலை) அவா்கள் இறைவனால் பாதுகாக்கப்பெற்று
ஃபிா்அவ்னின் மாளிகையிலே வளா்ந்து ஆளானாா்கள்

*உங்களை கடுமையாக வேதனைப்படுத்தி வந்த ஃபிர்அவ்னின் கூட்டத்தாரிடமிருந்து உங்களை நாம் விடுவித்ததையும் (நினைவு கூறுங்கள்);

அவர்கள் உங்கள் ஆண் மக்களை கொன்று, உங்கள் பெண்மக்களை (மட்டும்) வாழவிட்டிருந்தார்கள்; அதில் உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஒரு பெரும் சோதனை இருந்தது.

மேலும், இஸ்ராயீலின் சந்ததியினரை நாம் கடலைக் கடக்க வைத்தோம்;
அப்போது, ஃபிர்அவ்னும், அவனுடைய படைகளும், (அளவு கடந்து) கொடுமையும், பகைமையும் கொண்டு அவர்களைப் பின் தொடர்ந்தார்கள்;
(அவனை மூழ்கடிக்க வேண்டிய நேரம் நெருங்கி) அவன் மூழ்க ஆரம்பித்ததும் அவன்: இஸ்ராயீலின் சந்ததியினர் எந்த நாயன் மீது ஈமான் கொண்டுள்ளார்களோ, அவனைத் தவிர வேறு இறைவன் இல்லையென்று நானும் ஈமான் கொள்கிறேன்;
இன்னும் நான் அவனுக்கே முற்றும் வழிபடுபவர்களில் (முஸ்லிம்களில்) ஒருவனாக இருக்கின்றேன்” என்று கூறினான்.

எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உம் உடலைப் பாதுகாப்போம்;

நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்”
(என்று அவனிடம் கூறப்பட்டது).

ஃபிா்அவ்ன் எனும் இரண்டாவது ரம்சேஸின் சடலம் எகிப்தில் தைருல் பஹ்ரீ பகுதியில் கி.பி 1881 ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்டது பின்னா் கெய்ரோ அருங்காட்சியகத்தில் ராயல் மம்மி அறையில் இன்றும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது

அல்குா்ஆன் 2:49.10:90-92
தஃப்சீா் இப்னு கஸீா் 1/ பக்கம் 160 4/ பக்கம் 556




Sunday, September 1, 2019


அல்லாஹ்வே உன்னால்  செய்ய முடியாதது என்று எதுவுமில்லை.

  அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ்!

எல்லாம் வல்ல அல்லாஹ்வே உன்னால்  செய்ய முடியாதது என்று எதுவுமில்லை.
        சுட்டெரிக்கும் நெருப்பை இப்ராஹிம் நபி
அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்காக
குளிரவைத்தவனே!
       ஆர்பரிக்கும் ஆழ் கடலை நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களைக்காப்பாற்ற
இரண்டாக பிளக்கவைத்தவனே
       எலும்புகள் மிகவும் பலவீனமடைந்து
தலைமுடி நரைத்த நிலையில் மலடி யான
என் மனைவியின் மூலம் எனக்கு ஒரு வாரிசை தா "என மனமுருகி கேட்ட நபி
ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாத்திற்கு
குழந்தை செல்வத்தை வழங்கியவனே!

ஸவ்ர் குகையில் எங்கள் கண்மணி நபிகள் நாயகம்ﷺ அவர்களை காத்தவனே!
ஆட்சி அதிகாரங்களை அவர்களுக்கு வழங்கி  இப்பூமியில் ஒரு முன்மாதிரி சமுதாயத்தை உருவாக்கியவனே!
          உன்னால் முடியாதது என்று எதுவுமே இல்லை.

உலகெங்கும் வாழும் முஸ்லிம்களின் துன்பங்களை நீக்குவாயாக!

அநீதி இழைக்கப்பட்ட மக்களுக்கு  விரைவில் அவர்களுக்கான உரிமைகள் கிடைக்க நல்லுதவி செய்வாயாக!

      பொருளாதார சிக்கலினால் தங்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற இயலாமல் தவிப்போருக்கு உதவி செய்வாயாக!
 எங்களின் பாவங்களை மன்னித்து எங்களுக்கு மத்தியில் நல்லுறவு நிகழச்செய்வாயாக!

என்றேன்றும் உனக்குக் கட்டுபட்டு வாழும் நல்லடியர்களாக எங்களை வாழ வைப்பாயாக!

رَبَّنَا تَقَبَّلْ مِنَّا ‌ؕ اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْمُ ، وَتُبْ عَلَيْنَا ۚ اِنَّكَ اَنْتَ التَّوَّابُ الرَّحِيْمُ‏ 
“எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து இந்த துஆவை ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்”. எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.” 2:127-128

ஆமீன்