Popular Posts

Thursday, August 29, 2019

துஆ கேட்கும் முறை

துஆ கேட்கும் முறை
 நபிமார்கள் காட்டும் வழி

அல்லாஹ் விடம் உங்களின் தேவைகள்,எதிர்பார்ப்புகள் அனைத்தையும் தயக்கமின்றி நம்பிக்கையுடன் கேளுங்கள்.

நபி மூஸா அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரே நேரத்தில்  அல்லாஹ்விடம் எத்துனை கோரிக்கைகள் வைக்கிறார்கள் பாருங்கள்.

قَالَ رَبِّ اشْرَحْ لِىْ صَدْرِىْ ۙ‏ 
1.  "என் ரப்பே! என் உள்ளத்தைத்  திடப்படுத்திவிரிவாக்குவாயாக|

وَيَسِّرْ لِىْۤ اَمْرِىْ ۙ‏ 
2.என் காரியங்களை எனக்குச்  சுலபமாக்கி வைப்பாயாக!

وَاحْلُلْ عُقْدَةً مِّنْ لِّسَانِیْ ۙ‏ 
 3.என் நாவிலுள்ள (கொண்ணல்) முடிச்சை அவிழ்த்துவிடுவாயாக!

يَفْقَهُوْا قَوْلِیْ ‏ 
4. என் வார்த்தையை (மக்கள்) விளங்கிக் கொள்ளும்படிச் செய்வாயாக!

وَاجْعَلْ لِّىْ وَزِيْرًا مِّنْ اَهْلِىْ ۙ‏ 
5.என் குடும்பத்தில் ஒருவரை எனக்கு உற்ற துணையாக்கி (மந்திரியாக்கி) வைப்பாயாக!

هٰرُوْنَ اَخِى ۙ‏ 
6.அவர் என்னுடைய சகோதரர் ஹாரூனாகவே இருக்கட்டும்.

اشْدُدْ بِهٖۤ اَزْرِىْ ۙ‏ 
7.அவரைக் கொண்டு என் ஆற்றலை உறுதிப்படுத்தி வைப்பாயாக!

وَاَشْرِكْهُ فِىْۤ اَمْرِىْ ۙ‏ 
 8.என் காரியங்களில் அவரையும் கூட்டாளியாக்கி வைப்பாயாக

كَىْ نُسَبِّحَكَ كَثِيْرًا ۙ‏ 
நாங்கள் (இருவரும்) உன்னை அதிகமதிகம் புகழ்வோம்.

وَّنَذْكُرَكَ كَثِيْرًا ‏ 
(பின்னும்) உன்னை அதிகமாகவே நினைவு கூர்வோம்.

اِنَّكَ كُنْتَ بِنَا بَصِيْرًا‏ 
எங்கள் இறைவனே! நீ எங்களை உற்று நோக்கியவனாக இருக்கிறாய்" என்று (மூஸா) பிரார்த்தனை செய்தார்.

ஒரே நேரத்தில் மூஸாநபி அவர்கள் தன்னுடைய தேவைகளை ஒரே துஆவில் கேட்கிறார்கள்
அதற்கு அல்லாஹ் கூறிய பதில்

قَالَ قَدْ اُوْتِيْتَ سُؤْلَـكَ يٰمُوْسٰى‏  "
மூஸாவே! நீங்கள் கேட்ட #யாவும் நிச்சயமாக உங்களுக்குக் கொடுக்கப்பட்டன,
(அல்குர்ஆன் : 20:36)

ஆம் ! ஒரே துஆவில்  அல்லாஹ்விடம் உங்கள் தேவை எவ்வளவு இருந்தாலும் கேளுங்கள்.

அல்லாஹ் நாடினால் ஒரே நொடியில் அதை நிறைவேற்றுவான்

அதே நேரத்தில் என் தேவைகள் நிறைவேறினால் உன்னை அதிகமாக புகழ்வேன் நன்றி செலுத்துவேன் என்ற வாக்குறுதியையும்  அல்லாஹ்விற்கு
அளியுங்கள்.

நிச்சயமாக அல்லாஹ் செவிமெடுப்பான்.

No comments:

Post a Comment