Popular Posts

Wednesday, April 4, 2018

ரியாழுல் ஜினான் அரபுக்கல்லூரி


அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) 

    சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்று புகழ் பெற்ற, மார்க்க அறிஞர்களை உருவாக்கி அனுப்பும் ஓர் மதரஸாவை ரியாழுல் ஜினான் அரபுக்கல்லூரி பற்றி இங்கு அறிமுகப்படுத்துகின்றோம் .அல்ஹம்துலில்லாஹ்.

தொலைபேசி : +914622341068

செல் : 9865475367 ( முதல்வர்)



மதரஸா  ரியாழுல் ஜினான் அரபுக்கல்லூரி: 

தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் தீன் நெறி கோட்டையாம்  பேட்டையில் அமைந்துள்ளது. மதரஸா ரியாழுல் ஜினான் அரபுக்கல்லூரி. இது தமிழ்நாட்டில் வேலூர் மதரஸா அல் பாக்கித்துஸ் ஸாலிஹாத்திர்க்கு அடுத்து இரண்டாவது பெரிய மதரஸாவாகும். இம் மதரஸா  1870 ஆம்ஆண்டு ஆற்காடு நவாப்களின் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது. இந்த மதரஸாவில் ஒவ்வொரு வருடமும் நூறுக்கும் மேற்பட்டோர் மார்க்க கல்வி கற்றுவருகின்றனர். இதில் வருடம் தோறும் 20 மேற்பட்டோர் ஃபாஜில், மௌலவி மற்றும் ஹாபிழ் பட்டம் பெறுகின்றனர். இந்த மதரஸாவில் மார்க்க கல்வி கற்பதற்காக தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும், தென் இந்தியா விலிருந்தும், இலங்கை போன்ற நாடுகளிலிருந்தும் ஏராளமான இஸ்லாமிய மாணவர்கள் வருகின்றனர்.

பட்டமளிப்பு விழா : 

ஒவ்வொரு வருடமும் ஹிஜ்ரி ஆண்டில் ரமலானுக்கு முன்பு ஷாபான் மாதம் மதரசாவின் பட்டமளிப்பு விழா நடைபெறும். இரண்டு பெருநாட்களுக்கு பிறகு அடுத்து ஊரே கொண்டாடும் ஒரு விழா எதுவென்றால் அது ரியாழுல் ஜினான் அரபுக்கல்லூரி பட்டமளிப்பு விழாவாகும். அன்று ஊரே மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு திருவிழா போல் காட்சியளிக்கும். எட்டு வருடம் ஓதி முடிப்பவர்களுக்கு பாஜில் பட்டமும், ஏழு வருடம் ஓதி முடிப்பவர்களுக்கு மவ்லவி பட்டமும், குரானை மனனம் செய்து முடிப்பவர்க்கு ஹாபிஸ் பட்டமும் வழங்கப்படுகிறது. 

இங்கு ஓதி முடித்து பட்டம் பெறுவோர் தனது பெயருக்கு பின்னால் ரியாஜி எனும் வார்த்தையை சேர்த்து கொள்கின்றனர். ரியாஜி என்றால் மதரஸா ரியாழுல் ஜினான் அரபுக்கல்லூரியில் ஓதி முடித்து பட்டம் பெற்றவர் என்று பொருள்படும். பட்டமளிப்பு விழாவிற்கு தமிழ்நாட்டிலிருந்து பல புகழ் பெற்ற மார்க்க அறிஞர்களும், சமுதாய தலைவர்களும் கலந்து சிறப்பித்து வாழ்த்துரை வழங்குவார்கள்.

திருநெல்வேலி பேட்டையில் 

ரியாழுல் ஜினான் அரபுக்கல்லூரி 

கலைக்கூடம் : 

இங்குதான் மதரஸாவின் பட்டமளிப்பு விழா நடைபெறும், இது மதரஸாவின் உட்புறம் அமைந்துள்ள பெரிய அரங்கம் ஆகும். இவ்வரங்கத்தில் ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உட்கார்ந்து விழா நிகழ்ச்சிகளை காணமுடியும்.






மதரஸாவின் புகழ்பெற்ற முதல்வர்  அவர்கள்: 

மதரஸாவின் முதல்வர்களாக (பெரிய ஹஜ்ரத்களாக ) மறைந்த.................,  வாழும் புகழ்பெற்ற மார்க்க அறிஞர்கள் இருந்துள்ளனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் 

1. கொல்லம்  முஸ்தபா  ஹஜ்ரத் 

2. முஹமது  கண்  ஹஜ்ரத் 

3.ஷம்சுல் ஹூதா ஹஜ்ரத்

4. B.A.கலீல் ரஹ்மான் ஹஜ்ரத் 

5. T.J.M  சலாஹூத்தீன்  ரியாஜி  ஹஜ்ரத் 

6. S.லியாகத்  அலி மன்பயீ ஹஜ்ரத் 




தற்போது மதரஸாவின் முதல்வராக
  
(பெரிய ஹஜ்ரதாக )  20 ஆண்டுகால  பணியில் 

 M.Y .ஹுமாயுன்  கபீர்  உஸ்மானி  
ஹஜ்ரத் கிப்லா  பெருந்தகை  அவர்கள்  
பணியாற்றி   வருகிறார்கள். 

(செல் : 9865475367)



தற்போது நமது  ஜாமிஆ வின்  மதரஸாவின் 

உஸ்தாத்மார்களாக 20 ஆண்டுகால  பணியில் 

மௌலானா மௌலவி 
1. அப்துல்  ஜலீல்  உலவி  பாஜில் அன்வாரிஹஜ்ரத்அவர்கள்  



மௌலானா மௌலவி 

 2. ஷாஹுல்  ஹமீது  ஜலாலி  ஹஜ்ரத் அவர்கள்  




மதரஸாவின் சிறப்பம்சம்: 

இம் மதரஸாவில் தங்கி மார்க்க கல்வி கற்கும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் பேட்டையில் உள்ள வீடுகளிலிருந்து மதியம் மற்றும் இரவு உணவு டிபன் கேரியரில் வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஒவ்வொரு மாணவரையும் தங்கள் வீட்டு பிள்ளைகளைப்போல் கருதுகின்றனர். காலை உணவிற்கு மதரசா நிர்வாகம் பொறுப்பேற்றுள்ளது.

மதரஸா நிர்வாகம்

மதரசாவை நிர்வாகத்தை கவனிக்க மதரஸா நிர்வாக சபை அமைக்கப்பட்டுள்ளது. நிர்வாக சபைக்கு உறுப்பினர்கள் பேட்டையின் ஒவ்வொரு முஹல்லாவிளிருந்தும் ஒரு குறிப்பிட்ட உறுப்பினர்கள் முஹல்லாவாசிகளால் தேர்ந்தடுக்கப்பட்டு மதரஸா நிர்வாக சபைக்கு அனுப்படுகின்றனர், அவர்கள் ஒவ்வொரு மாதமும் கூடி வரவு செலவு கணக்குகள் , மதரஸா அபிவிருத்தி திட்டங்கள், பராமரிப்பு மற்றும் நிர்வாகதைப்பற்றியும் விவாதிப்பார்கள்.



150ஆண்டு கள் பழமை வாய்ந்த புகழ் பெற்ற 

மதரஸா  ரியாழுல் ஜினான் அரபுக்கல்லூரி

மேலும் கியாம நாள் வரை ....  பல நூற்றாண்டுகளுக்கு ஆலிம்களையும், ஹாபிழ்களையும், மார்க்க அறிஞர்களையும் உருவாக்கிடவும், அதன் புகழ் என்றென்றும் குறையாமல் இன்னும் பல புகழ்களைப் பெற முஸ்லிமாகிய நாம் அனைவரும்  வல்ல அல்லாஹ்விடம்  துஆச் செய்யுமாறு உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் வஸ்ஸலாம் ...



ரியாஜிகள் பேரவை 
  என்பது
மதரஸா ரியாழுல் ஜினான் அரபுக்கல்லூரியில் பட்டம் பெற்று சென்ற பழைய மாணவர்களின் 
அமைப்பாகும்

இங்கு பயின்று பட்டம் பெற்று சென்ற ரியாஜி ஆலிம் ஸனது பெற்றவர்களுல்  குறிப்பிடதக்க நாடு போற்றும் நாவலர்கள் 


டி ஜே எம் ஸலாஹூத்தீன் ரியாஜி
முன்னால் பொதுச்செயலாளர் 
தமிழ்மாநில ஜமாஅத்துல் உலமா சபை

கே எம் இல்யாஸ் ரியாஜி 
மந்தைவெளி மஸ்தித் தலைமை இமாம்
சென்னை 
துனை பொதுச்செயலாளர்
தமிழ்மாநில ஜமாஅத்துல் உலமா சபை

எஸ் ஆர் அப்துல் காதர் ரியாஜி 
வடகரை
நாடறிந்த நாவலர்





🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
          திருநெல்வேலி பேட்டை 
        மதரசா ரியாளுள் ஜினான் 
              அரபிக் கல்லூரியில்
     மாணவர் சேர்க்கை அறிவிப்பு
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
நன்கு குர்ஆன் ஓத தெரிந்த,  

எழுத படிக்க தெரிந்த மாணவர்கள் அனைவரும் சேரத் தகுதியானவர். 
ஆண்களுக்கு மட்டுமே  அனுமதி.
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌸🌸உணவு  -உறைவிடம்  - அத்தியாவசியத்தேவை-    மருத்துவம் என அனைத்தும்  இலவசமாக வழங்கப்படும்.
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
8-10-12ஆம் வகுப்பு,
பொதுத் தேர்வுகள் எழுதவும்,  
ஆலிம்-, அஃப்சலுல் உலமா, பி.ஏ.,
எம்.ஏ.(அரபிக்)  போன்ற பட்டப்படிப்பு
படிக்கவும்....  பயிற்சி வழங்கப்படும்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
தொடர்புக்கு:-
தொலைபேசி : +914622341068
செல் : 9865475367 ( முதல்வர்)
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼



போதிக்கப்படும் பாடங்கள்:
****************************
குர்ஆன் கலை,
ஹதீஸ் கலை,
தஜ்வீத்/திலாவத்,
தப்ஸீர் -குர்ஆன் விளக்க கல்வி,
அரபு மொழி எழுத்துப்பயிற்சி,
அரபு மொழி பேச்சுப்பயிற்சி,
அரபு மொழி இலக்கனம்,
கணிதம்/அறிவியல்/ஆங்கிலம்.
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 *************************************
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 பேட்டை ரியாழுல் ஜினான் மதரஸாவில் பிலாலியா அரபிக் கல்லூரி மாணவர்களின் மாபெரும் ஹதீஸ் ஆய்வரங்க நிகழ்ச்சி 2015 ஆம் ஆண்டு நமது மதரஸாவின் கலைக்கூடத்தில் வைத்து சிறப்பாக நடைபெற்றது.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

1 comment:

  1. Casino Games - Jtmhub
    Join us today for a chance to 광명 출장안마 play all your favourite casino games. New games, 태백 출장샵 and exciting new 안성 출장마사지 customer offers, at the official 부산광역 출장마사지 JtmHub site. 경기도 출장샵

    ReplyDelete